தமிழ்நாடு:
- 4 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 1000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவிப்பு
- தமிழ்நாட்டில் இனி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
- மாநிலங்களை ஒருங்கிணைத்து உரிமைக்காக போராடுவோம் என கேரளாவில் நடந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
- கோடை வெயில் அதிகமாக இருக்கும்போது தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
- சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்ட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
- சென்னை மாநகராட்சி அரசு மாணவிகளுக்கு நிர்பயா (Nirbhaya) நிதியின் மூலம் முக்கிய நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா:
- 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய அனைவரும் வரும் இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவிப்பு
- கொரோனா மருந்து தடுப்பூசிகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மருந்து நிறுவனங்கள் அறிவிப்பு
உலகம்:
- நாடாளுமன்றத்தில் நம்பிக்கையிலா தீர்மானம் நிறைவேறியதால், பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது
- அதனை அடுத்து, பாகிஸ்தான் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
- இதன்படி, அந்த நாட்டில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்பட நாட்டின் உயர் அதிகாரிகளும், அனைத்து அரசு அலுவலர்களும் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அவசரநிலை பிரகடனத்தால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்
- உக்ரைன் நாட்டிற்கு திடீரென பயணம் மேற்கொண்டுள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன்
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியைத் தழுவி இருக்கிறது. நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் பெங்களூரு அணியிடம் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது.
- ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும், இரண்டாம் போட்டியில் ராஜஸ்தான் அணியும், லக்னோ அணியும் மோத உள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்