தமிழ்நாடு:


* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார். எதிர்க்கட்சி முதல்வர்களின் மாநாட்டை விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.


* மேற்குவங்க சட்டமன்றம் முடக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு.


* இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் மீண்டும் மீண்டும் தாக்கப்படுவதை தடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.


* சட்டமன்றம் முடக்கப்படும் என எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம்


* திமுகவினர் வாய்க்கு வந்தபடி பொய் பேசுகிறார்கள். எல்லாவற்றையும் எதிர்க்கிறார்கள் - அண்ணாமலை


* மகளிர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி


* கொரோனா குறைந்த நிலையில் சென்னையில் மின்சார ரயில்கள் இன்று  முதல் 100% இயக்கப்படுகிறது


இந்தியா:


* பிரான்ஸ் நாட்டில் இருந்து 3 ரபேல் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகை. ரூ.56 ஆயிரம் கோடி ஒப்பந்தம் நிறைவு.


* பிஎஸ்எல்வி  சி52 ராக்கெட் மூலம் இஓஎஸ் 04 செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்து வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.


* உத்தரகாண்ட், கோவாவில் இன்று தேர்தல் - ஒரே கட்டமாக நடைபெறுகிறது.


* மேற்குவங்க சட்ட மன்ற விவகாரம்; முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்துக்கள் புண்படுத்துகிறது - மேற்கு வங்க ஆளுநர்


* பிரசாந்த் கிஷோரின் 5 ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தார் மம்தா பானர்ஜி


* கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தால் மூடப்பட்ட பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு


உலகம்:


* கனடாவில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு - போராட்டம் தீவிரமாகிறது


* பாகிஸ்தானில் கல்லால் அடித்து ஒருவர் கொலை - குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க இம்ரான் கான் உத்தரவு


விளையாட்டு:


* இரண்டு நாட்களாக நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 204 வீரர்கள் ஏலம் போனார்கள். சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் வாங்காததால் ரசிகர்கள் கவலை.


* சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை  ரூ.30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண