தமிழ்நாடு:


* ஜனவரி 25ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் எந்த ஒரு சேவல் சண்டைக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 


* பொங்கல், தைப்பூசத்தை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 5 நாள் தொடர் விடுமுறையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


* முன்களப் பணியாளர் என்ற முறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.


* தமிழ்நாட்டில் ஒரே நாளில் 15,379 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு - 20 பேர் உயிரிழப்பு  


* மதுரையில் ஜனவரி 17-ம் தேதிக்கு மாற்றப்படுகிறது ஜல்லிக்கட்டு போட்டி: ஆட்சியர் தகவல்


* தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பரிசோதனைகள் நிறுத்திவைப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் 


* பொங்கல் பரிசுப் பொருட்களை பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்தது ஏன்? - ஓபிஎஸ் கேள்வி


இந்தியா:


* நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார்.


* பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து ஐசியூவில் அனுமதி - பிரதமர் மோடி நலம் விசாரிப்பு


* உத்தரப் பிரதேசத்தில் பாஜகவிலிருந்து அடுத்தடுத்து விலகும் எம்எல்ஏக்கள், அமைச்சர்களால் அம்மாநில தேர்தலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ​


* கொரோனா பரவலால் டெல்லியில் தனியார் அலுவலகங்கள் மூடல்; வீட்டில் இருந்து பணி செய்ய உத்தரவு


உலகம்:


*  அமெரிக்காவில்  முதல்முறையாக  மனிதனுக்கு பன்றி இதயம்  பொருத்தி மருத்துவ உலகில் சாதனை 


*  பாகிஸ்தானில்  கொரோனா  5ஆவது அலை தொடங்விட்டதாக அந்தநாட்டு அரசு அறிவித்துள்ளது.



விளையாட்டு:


* ஐபிஎல் டி20 போட்டிகளின் டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனத்திற்கு பதில் டாடா நிறுவனம் ஒப்பந்தம்.


* இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா உறுதியானது. 


* தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான  மூன்றாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்தியா 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  கேப்டன் கோலி அரைசதம் அடித்தார்.


* வரும் பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் இந்த மெகா ஏலம் நடைபெறும் என்பதை ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் பட்டேல் உறுதிப்படுத்தியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண