மத்தியப் பிரதேசத்தின் போபாலில் இருந்து வந்ததாகக் வைரலாகியுள்ள ஒரு வீடியோவில், ஒரு பெண் தள்ளு வண்டியில் பழங்கள் விற்பனை செய்பவர் எடுத்துச் சென்ற பழங்களை எடுத்து தூக்கி தரையில் எறிவதைக் காணமுடிகிறது, அந்த வீடியோவில் அந்தப் பெண்ணுக்குச் சொந்தமான காரை தள்ளு வண்டி இடித்துவிட்டது, அதனால் கோபமடைந்த பெண் இறங்கி வந்து பழங்களை எடுத்து எறிந்தார் என்று கூறப்படுகிறது. இசார் ஹசன் கான் என்ற பயனரால் பகிரப்பட்ட வீடியோ கிளிப் ட்விட்டரில் பெரும் சீற்றத்தைத் தூண்டியது. பழங்களை எடுத்து எரியும் பெண் போப்பாலில் ஒரு தனியார் பல்கலைகழகத்தின் உதவி பேராசிரியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.










இருப்பினும், அவர் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் வீடியோ வைரலாகி, ட்விட்டரில் விமர்சனத்திற்கு உள்ளானது. பயனரால் பகிரப்பட்ட சம்பவத்தின் இரண்டாவது வீடியோவில், பழ விற்பனையாளர் கார் உரிமையாளரிடம் பழங்களை தூக்கி எறிய வேண்டாம் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டார், ஆனால் அவரை மதிக்காமல் மீண்டும் பழங்களை தூக்கி எறிந்துகொண்டே இருந்தார்.






"போபாலின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் ஒரு பெண் கை வண்டியில் இருந்து தரையில் பழங்களை வீசுவதைக் காணலாம். பழ விற்பனையாளரையும் பெண்ணையும் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது," என்று போபால் கலெக்டர் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.