தமிழ்நாடு:



  • உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

  • காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

  • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

  • காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரையை கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

  • சென்னை வில்லிவாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த எஸ்.ஐ மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • மின் கட்டண ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெற்ற பின்பு அடுத்த மாதம் முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.

  • அதிமுக பொதுக்குழு வழக்கில் கழக நிர்வாகிகளும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

  • அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.


இந்தியா:



  • டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சென்ட்ரல் விஸ்டா கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

  • இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. 

  • நீட் தேர்வு எழுதிய 17லட்சத்து 64 ஆயிரம் பேரில் 9 லட்சத்து 93 ஆயிரம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

  • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை மற்றும் கடமை பாதையையும் இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

  • 14500 பள்ளிகளை மேம்படுத்த பிரதமரின் ஸ்ரீ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 


உலகம்:



  • காங்கோவில் புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  • எரிசக்தி துறையில் ரஷ்யாவுடன் ஒன்று சேர்ந்து ஒத்துழைப்பை வழுப்படுத்த இந்தியா விரும்புவதாக பிரதமர் மோடி பேச்சு.

  • கோட்டபய ராஜபக்சேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சராக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட சுவல்லா பிரேவர்மன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • தென்கொரியாவின் போஹாங் பகுதியில் நீரில் மூழ்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • உக்ரைன் அதிபர் ஸ்லென்ஸ்கியை சந்தித்த நடிகர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.


விளையாட்டு:



  • ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. 

  • ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் இறுதிப் போட்டி வாய்ப்பு பறிபோனது.

  • ஆசிய கோப்பையில் இன்று நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் இந்தியா-ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.