தமிழ்நாடு:
- தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் வழியாக பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் தொடங்கியது.
- பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்; ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது - சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம்
- 100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடரும்; புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்தது
- தீபாவளியை முன்னிட்டு தீவுத்திடலில் அக்டோபர் 11ம் தேதி முதல் பட்டாசு விற்பனை தொடக்கம் : சுற்றுலாத்துறை அறிவிப்பு
- கரூர் மாவட்டத்தில் இன்று 36வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
- அண்ணாமலை முழுநேர அரசியல்வாதி கிடையாது - முன்னாள் முதல்வர் நாராயணசாமி
- கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை நடைபயணம் நிறைவு : கேரளா சென்றார் ராகுல் காந்தி
- மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 65,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்தியா :
- ஆந்திர கடலோர பகுதிகளையொட்டிய வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது.
- உத்தரகாண்ட் பித்தோராகரில் உள்ள தார்ச்சுலா நகரில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கிட்டத்தட்ட 50 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
- மத்தியப் பிரதேசத்தில் கோயில் பிரசாதத்தை திருடியதாக தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த மதகுரு : தந்தை அளித்த புகாரின் பேரில் ஜெயின் மீது வழக்குப்பதிவு
- சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்த அக்ஷய்குமாருக்கு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நன்றி கூறியுள்ளார்.
- ரூ. 1000 கோடி முறைகேடு: அரசியல் கட்சிகளை சுற்றி வளைக்கும் ஐ.டி.
உலகம் :
- ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து இங்கிலாந்து மன்னரானார் சார்லஸ்: வேல்ஸ் இளவரசராக வில்லியம்ஸ் நியமனம்
- ஆப்கானிஸ்தான் : ராணுவ ஹெலிகாப்டரில் பயிற்சியின்போது விபத்து - 3 தலிபான்கள் பலி
- ரஷ்யாவில் புதினை அதிபர் பதவியில் இருந்து நீக்க கோரிய 5 அதிகாரிகள் கைது; தேசத்துரோக வழக்கு பதிவு
- ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வருகின்ற 19 ம் தேதி நடைபெறும் : பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு
- நியூசிலாந்தில் திமிங்கலம் மோதி கடலில் படகு கவிழ்ந்தது - 5 பேர் பலி என தகவல்
விளையாட்டு :
- ஆரோன் பிஞ்ச் இன்று நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.
- தடகள வீரர் நீரஜ் சோப்ரா இந்திய வீரர்கள் அதிகளவில் சர்வதேச போட்டித் தொடர்களில் பங்கேற்க வேண்டும் என்று விரும்புவதாக கூறியுள்ளார்.
- குஜராத்தில் நடைபெற உள்ள தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
- யுஎஸ் ஓபன் மகளிர் இறுதிப் போட்டியில் இகா ஸ்வியாடெக் ஓன்ஸ் ஜபியரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.