தமிழ்நாடு:
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து ஓராண்டாகிறது.
- சென்னையில் 31 ஆவது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை விற்கப்படுகிறது. அதன்படி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கும், டீசல் விலை 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- LPG Gas Cylinder விலை ரூ.50 அதிகரித்துள்ளது.14 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 50 ரூபாய் அதிகரித்து ரூ.1015.50க்கு இன்று முதல் விற்கப்படுகிறது.
- சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில், 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமை செயலக காலனி நிலைய எழுத்தர் முனாஃப், காவலர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- மே 14-ம் தேதி முதல் 1-9 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு
இந்தியா :
- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை ராணுவத்தில் சேர்க்க மத்திய அரசு முடிவு
- டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு புதியதாக 7 நீதிபதிகள் நியமனம்
உலகம் :
- இலங்கையில் மீண்டும் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
- பிரதமர் மஹிந்தாவிடம் பதவி விலகுமாறு இலங்கை அதிபர் கோத்தபய வேண்டுகோள் விடுத்துள்ளார்
- இலங்கையில் மீண்டும் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், அமைச்சர்கள் சிலர் பதவி விலக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
- அசாதாரண சூழலில், இலங்கையில் தொடர்ந்து மக்கள் போராட்டம் நடைபெற்று வருகின்றது
விளையாட்டு :
- நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 5 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. இதன் மூலம் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது மும்பை அணி
- இன்று நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகளில், மதியம் 3.30 மணிக்கு பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகளும், இரவு 7.30 மணிக்கு லக்னோ, கொல்கத்தா அணிகளும் மோதுகின்றன
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்