ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எப்போதும் தன்னுடைய புதிய ஐடியாவை வைத்து பலரையும் கவரும். அது வாடிக்கையாளர்களாக இருந்தாலும் சரி இல்லை ஊழியர்களாக இருந்தாலும் சரி. அந்தவகையில் தற்போது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவித்து ஊழியர்களை மிகவும் கவர்ந்துள்ளது. அந்த சலுகை என்ன?


கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வேக்ஃபிட் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் அண்மையில் ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். அதில், “நாம் அனைவரும் 6 மணி நேரம் மட்டும் தூங்கி வருகிறோம். ஆனால் சரியாக ஓய்வு எடுப்பதை மறந்து வருகிறோம். குறிப்பாக மதிய வேளையில் ஒரு குட்டி தூக்கம் போடுவதை மறந்துவிடுகிறோம். 


மதிய வேளையில் சிறிது நேரம் தூங்கும் போது நம்முடைய மூளையில் ஞாபக சக்தி அதிகரிக்கிறது.அத்துடன் நாசாவின் ஆய்வின்படி 26 நிமிட குட்டி தூக்கம் நம்முடைய செயல்பாட்டு திறனை 33% வரை அதிகரிக்கிறது. இந்த ஆய்வு முடிவுகளை கருத்தில் கொண்டு நம்முடைய அலுவலகத்தில் ஒரு புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 






அதன்படி இனிமேல் வேலை நேரத்தில் தினமும் மதியம் 2 முதல் 2.30 வரை அனைத்து ஊழியர்களும் தூங்க அனுமதிக்கப்படுவார்கள். இவை அனைத்தும் ஊழியர்களின் பதிவேட்டில் மாற்றப்படும். அந்த நேரங்களில் யாரும் ஊழியர்களை தொந்தரவு செய்ய கூடாது. அலுவலகத்தில் ஊழியர்கள் நிம்மதியாக தூங்கும் இடம் ஒன்றை அமைக்கப்படும். அனைவரும் வேலை நேரத்தில் தூங்கி பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 






இந்த மின்னஞ்சலை அந்த நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதைப் பார்த்து பலரும் வியப்புடன் அந்த நிறுவனத்தை பாராட்டி வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண