தமிழ்நாடு:
- டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடர்ந்து 2வது நாளாக ஆய்வு செய்கிறார்.
- தனக்கு அமைச்சர் பதவி வழங்குமாறு தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
- தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி ஸ்வாதிஸ்ரீ அகில இந்திய அளவில் 42வது இடத்தை பிடித்துள்ளார்.
- மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் வேட்புமனுத்தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல்.
இந்தியா:
- சிம்லாவில் பாஜக அரசின் எட்டாண்டு நிறைவு விழா நடைபெறுகிறது.
- அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று உரையாடுகிறார்.
- டெல்லி சுகாதாரத்துறை அமைச்சரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
- டெல்லியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. இதன்காரணமாக மரங்கள் சாலையில் சாய்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடியுடன் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் சந்தித்தார்.
உலகம்:
- உக்ரைன் நாட்டின் கார்கிவ் பகுதியில் மீண்டும் ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
- குடியரசுத்துணை தலைவர் மத்திய ஆஃபிரிக்கா நாடான காயோனிற்கு சென்றுள்ளார்.
- பிரேசிலில் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91ஆக அதிகரிப்பு.
- இத்தாலியில் கொரோனா விதிமுறைகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
- உலகளவில் 24 நாடுகளில் குரங்கம்மை நோய் பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் தகவல்.
விளையாட்டு:
- ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையுடன் பேருந்தில் வெற்றி பயணம் மேற்கொண்டது.
- பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர் மெத்வதேவ் தோல்வி அடைந்து வெளியேறினார்.
- பிரஞ்சு ஓபன் டென்னிஸ் காலிறுதிச் சுற்றில் நடால்-ஜோகோவிச் ஆகியோர் மோதுகின்றனர்.
- ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா-தென்கொரியா அணிகள் இன்று மோதுகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்