தமிழ்நாடு:



  • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை இன்று குடியரசுத்துணை தலைவர் வெங்கய்யா நாயுடு திறந்து வைக்கிறார்.

  • தமிழ்நாட்டில் உள்ள 355 ஊராட்சிகளில் சுகாதார பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு ஊராட்சிகளில் ரூ.12 கோடியில் 1,159 பணிகள் செய்யும் பணி தொடங்கியுள்ளது. 

  • தேசிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

  • கொரோனா பரவலை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

  • தமிழ்நாட்டில் ஜூன் 1ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அறிவிப்பு.

  • தமிழ்நாட்டில் இன்றுடன் அக்னி நட்சத்திர வெயில் முடிவுக்கு வருகிறது.


இந்தியா:



  • பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா அரசு தொடர்பான வெளிநாட்டின் பார்வை மாறியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

  • லடாக்கில் ஏற்பட்ட சாலை விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 19க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.

  • பிரதமர் மோடி இன்று குஜராத் மாநிலத்திற்கு பயணம் செய்கிறார்.

  • ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தப் போது ஊழல் செய்து தொடர்பாக முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீது விசாரணை நடத்தப்பட உள்ளது.

  • உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்குள் செல்ஃபி எடுக்க சபாநாயகர் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.


உலகம்:



  • ஆஃப்கானிஸ்தான் மக்களுக்கு எப்போதும் இந்தியா துணை நிற்கும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

  • பிரிக்ஸ் உச்சி மாநாடு காணொளி மூலம் நடைபெற உள்ளதாக தகவல். இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜிங்பிங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

  • இலங்கைக்கு 25 டன் மருந்துகளை வழங்கி இந்தியா உதவியுள்ளது. 

  • ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மூடுபனி சூழந்துள்ள காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளுக்கு அடுத்த ஆண்டிற்கு ஜப்பான் ராணுவ பொருட்களை ஏற்றுமதி செய்ய உள்ளதாக தகவல்.


விளையாட்டு:



  • ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

  • நாளை நடைபெற உள்ள ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

  • பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ரஃபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகிய இருவரும் 4ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண