தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டில் இருந்து நாளை முதற்கட்டமாக சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட உள்ளன. 

  • தமிழ்நாட்டில் 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.

  • தமிழ்நாட்டில் ஜூலை 15ஆம் தேதி முதல் மாதம் தோறும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. 

  • கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சல் சாதாரண நோய் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷணன் விளக்கம்.

  • தமிழ்நாடு முழுவதும் இன்று ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.


இந்தியா:



  • காங்கிரஸ் ஆட்சியின் போது நாட்டின் வளர்ச்சி மிகவும் முடங்கி விட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

  • டெல்லி வணி வளாக கட்டடத்தில் தீ விபத்து 27 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டடத்தில் இருந்து 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

  • டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • காங்கிரஸ் கட்சியில் உடனடி மாற்றம் தேவை என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

  • காஷ்மீரில் 2 தீவிவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

  • முதுகலை நீட் தேர்வை தள்ளி வைக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.


உலகம்:



  • சீனா,ரஷ்யா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்

  • இந்த மாதம் இறுதியில் இலங்கை பிரதமர் ரணில் இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  • ஐக்கிய அமீரக நாட்டின் தலைவர் மறைவிற்கு இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

  • இலங்கை அரசுக்கு ஜப்பான் நிதியுதவி அளிக்க உள்ளதாக தகவல்.

  • உக்ரைன் நாட்டின் கியூவ் நகரில் வரும் 15ஆம் தேதி முதல் இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல்.


விளையாட்டு:



  • ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

  • ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா-சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

  • தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆடவர் அணி டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண