கடந்த 2012-19 காலகட்டத்தில் நாட்டின பசுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் 2012ல் 15.12 கோடியாக இருந்த நாட்டின கால்நடைகளின் எண்ணிக்கை 6% குறைந்து 2019ல் 14.21 கோடி என்றளவில் சரிந்தது. ஒட்டுமொத்த கால்நடைகளில் நாட்டினத்தின் சதவீதம் 79%ல் இருந்து 73% ஆகக் குறைந்துள்ளது.


அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:


நாடு முழுவதும் 23 வகையான நாட்டின பசுக்கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கையானது கடந்த 2012 தொடங்கி 2019 வரையிலான 7 ஆண்டு காலத்தில் 1.08% ல் இருந்து 93.48% ஆகக் குறைந்துள்ளது. 
2018 19 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கால்நடைகள் கணக்கெடுப்பு அடிப்படையில் தயாரிக்க அறிக்கையை, மத்திய மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வலத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா வியாழக்கிழமையன்று வெளியிட்டார்.
அந்த அறிக்கையின்படி  2012ல் 15.12 கோடியாக இருந்த நாட்டின கால்நடைகளின் எண்ணிக்கை 6% குறைந்து 2019ல் 14.21 கோடி என்றளவில் சரிந்தது. ஒட்டுமொத்த கால்நடைகளில் நாட்டினத்தின் சதவீதம் 79%ல் இருந்து 73% ஆகக் குறைந்துள்ளது.


டாப் 5 மாட்டினமும் எண்ணிக்கையும்:
கிர் வகை மாட்டினம்: 68,57,784
லக்கிமி வகை மாட்டினம்: 68,29,484
ஷஹிவால் வகை மாட்டினம்: 59,49,674
பச்சார் வகை மாட்டினம் 43,45,940
ஹரியானா வகை மாட்டினம் 27,57,186


இதுதான் இப்போதைய புள்ளிவிவரம்.


அதேவேளையில் 2015 அம் ஆண்டில் கலப்பின பசுக்களின் எண்ணிக்கை 3.9 கோடியாக இருந்தது. 2019ல் அது 5 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாட்டுப் பசுக்களும் அடங்கும்.


வெகுவாகக் குறைந்துள்ள 5 உள்நாட்டு மாட்டினம் எவை என்று பார்ப்போம். காரியார் (-93%), கேரிகார் (-75%), கென்கதா  (-67%), மோட்டு (56%), ஹரியானா (56%).


ஒடிசா மற்றும் சத்தீஸ்கரின் காணப்படும் காரியார் இன பசுக்களின் எண்ணிக்கை 2013ல் 3,83,824 ஆக இருந்தது. அதுவே, 2019ல் 25,021 ஆகக் குறைந்துவிட்டது.


அதேபோல் ஹரியானா இனம் ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் பிஹாரிலேயே அதிகமாகக் காணப்படுகிறது. மோட்டு ஒடிசாவில் அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் ரெட் காந்தாரி அதிகமாக இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் கென்கதாவும், உத்தரப்பிரதேசத்தில் கேரிகாரும் அதிகமாக இருக்கின்றன.
இதேபோல், சரிவை சந்தித்துள்ள மற்ற இனங்கள்: டங்கி, டியோனி, தமிழ்நாட்டின் காங்கேயம் மற்றும் உம்பளசேரி, பிஞ்சார்பூரி, கான்க்ரெஜ், மேவாடி, கிலார், கோசாலி, மால்வி, காவ்லாவ், ஒடிசாவின் குமுசாரி ஆகியனவும் அடங்கும்.


அதேவேளையில் கடந்த 2012 முதல் 2019 வரை 14 வகையான நாட்டினப் பசுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவை வெச்சூர் (512%) புங்கனூர் (369%) பர்கூர் (240%) பச்சார் (181%), கிருஷ்ணா வேலி (57%), புலிக்குளம் (38%), கிர் (34.12%), அம்ரித்மஹால் (31%), ஷாஹிவால் (22%), ஆங்கோல் (11%), ரெட் சிந்தி (10%), நிமாரி (6%) மற்றும் பொன்வார் (2.46%).


அறிக்கையின்படி அழிவில் உள்ள நாட்டினப் பசுக்களை மீட்டெடுக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.