தமிழ்நாடு:
- நீர் மேலாண்மை தொடர்பான மத்திய அரசின் விருதுகளில் தமிழ்நாட்டிற்கு 3ஆவது இடம் கிடைத்துள்ளது.
- சென்னையின் மாதவரம் அருகே இ-ஸ்கூட்டர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
- போக்குவரத்து அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்ப்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக மாற்றம்.
- டிஎன்பிஎஸ்.சி குரூப் 4 தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடைபெறுகிறது.இந்தத் தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்.சி தெரிவித்துள்ளது.
இந்தியா:
- ஃபின்டெக் மாநாட்டில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
- படைகளின் தயார் நிலை குறித்து ராணுவ தளபதி இன்று ஆய்வு.
- புதுச்சேரி மாநிலத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
- இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் 3400 வகுப்புவாத குற்றங்கள் நடைபெற்றதாக மத்திய இணையமைச்சர் தகவல்.
- ராஜஸ்தானின் சாரிஸ்கா தேசிய பூங்காவில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இந்திய விமானப் படை பயன்படுத்தப்பட்டது.
- அசாம் மாநிலம் காசிரங்காவில் 4 ஆண்டுகளில் 2000 ஒற்றை கொம்பு காண்டா மிருகங்கள் அதிகரிப்பு.
- இந்தியாவின் தேஜஸ் விமானத்தில் அமெரிக்காவின் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.
- கோவா மாநில முதலமைச்சராக பிரமோத் சாவந்த் நேற்று பதவியேற்றுள்ளார்.
உலகம்:
- இந்தியா-இலங்கை இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சுற்றுப்பயணத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
- வாஷிங்டனில் ஏப்ரல் 11ஆம் தேதி இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
- இஸ்ரேலில் தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச்சுட்டில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசு மீதான நம்பிகையில்லா தீர்மானம் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வாக்கெடுப்பு.
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியுள்ளது.
- ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்