பெண்களின் சாக்ஸ், தலை, உள்ளாடை எல்லாம் ரொம்பவே வீசும்.. அதுவும் பெண்கள் அணியும் சாக்ஸ் ஆண்களுடையதைவிட 5% அதிகமாக நாறும் என்று கூறி மிகப்பெரிய வெறுப்பை சம்பாதித்துள்ளது P&G எனப்படும் ப்ராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம்.


சீனாவில்  P&G எனப்படும் ப்ராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் மேற்கொண்ட விளம்பரத்தில்தான் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சீனாவின் சமூக வலைதள பக்கம் வீ சேட். இந்தப் பக்கத்தில் அண்மையில்  P&G எனப்படும் ப்ராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தது. அதேபோல் சீனாவின் ட்விட்டர் என்றழைக்கப்படும் வெய்போ தளத்திலும் இக்கருத்தைப் பகிர்ந்திருந்தது.


அதில், பகிரப்பட்ட தகவல் அனைத்துமே பாலின ரீதியாக பெண்களை மட்டுப்படுத்தும் கருத்துகள் என்ற கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  கடந்த மார்ச் 13 ஆம் தேதி  P&G எனப்படும் ப்ராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் அந்தப் போஸ்ட்டை வீ சாட் மற்றும் வெய்போவில் பகிர்ந்திருந்தது. கடும் எதிர்ப்புகள் அந்த போஸ்ட்டை நீக்கியுள்ளது. நீக்க மட்டும் செய்யவில்லை மன்னிப்பும் கோரியுள்ளது.


அந்தப் போஸ்டில் பி அண்ட் ஜி நிறுவனம் சில இன்ஃபோகிராஃபிக்ஸைப் பகிர்ந்தது.


அவற்றில் சில..
1. பெண்களின் மார்பகப் பகுதியில் மோசமான வாசனை வீசும்.
2. பெண்களின் கூந்தல் ஆண்களின் கூந்தலைவிட மோசமாக நாறும். காரணம் அவர்கள் ஆண்களைவிட மிகக் குறைவான அளவிலேயே தலைக்கு குளிக்கின்றனர். அதனால் அவர்கள் தலையில் அதிக கிருமிகள் இருக்கும்.
3. பெண்களின் சாக்ஸ் ஆண்களின் சாக்ஸைவிட ஐந்து மடங்கு அதிகமாக வீசும்.
4. பெண்கள் எவ்வளவுதான் தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணினாலும் கூட அவர்களின் உள்ளாடைகள் ஆண்களின் உள்ளாடைகளைவிட அதிக அழுக்காக இருக்கும்.


இது போன்ற செக்ஸிஸ்ட் கருத்துகளை  P&G எனப்படும் ப்ராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் கூறியிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ப்ராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கோரி அந்த பதிவுகளை சீன சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியுள்ளது.


அந்த போஸ்டில், நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். பெண்களை அவமதிக்கும் வகையில் நாங்கள் கருத்து கூறியமைக்கும் வருந்துகிறோம். சீன மொழியிலேயே இந்த மன்னிப்பை எழுதி வெளியிட்டது அந்நிறுவனம்.


மேலும்,  அந்நிறுவனம் தனது மன்னிப்புக் கடிதத்தில், ப்ராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் எப்போதுமே சமமான, சகிப்புத்தன்மை கொண்ட, மதிப்பிற்குரிய மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது. நாங்கள் சர்ச்சையைக் கிளப்பிய அந்த செய்தியை வீ சாட், வெய்போ போன்ற சீன சமூகவலைதளப் பக்கங்களில் இருந்து நீக்கி விட்டோம் என்று குறிப்பிட்டிருந்தது.