தமிழ்நாடு:
- துபாய் சென்றிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், துபாய்க்கான இந்திய தூதர் உள்ளிட்ட முக்கிய பிரமூகர்களுடன் சந்திப்பு
- துபாய் சர்வதேச எக்ஸ்போவில் தமிழ் அரங்கை இன்று முதலமைச்சர் திறந்து வைக்கிறார்
- காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்றும், நிதித்துறையில் ஒற்றைச்சாளர முறை கொண்டு வரப்படும் எனவும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
- தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கணிப்பு
இந்தியா:
- உத்திரப்பிரதேச முதலமைச்சர் இன்று யோகி ஆதியநாத் பதவி ஏற்கிறார். பிரதமர் மோடி, பாஜக கட்சி முக்கிய தலைவர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு
- முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு முறையும் புதிய விவாதங்களை நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அணை பராமரிப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் கேரள தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று உச்சநீதிமன்றம் கேரள மாநிலத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம்:
- உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு ஐநா கடும் எதிர்ப்பு. மோசமான மனிதாபிமான சூழலை ஏற்படுத்தி இருப்பதாக கண்டனம்
- ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் 140 நாடுகளுடன் நிறைவேறியது. இந்தியா உள்ளிட்ட 38 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை
விளையாட்டு:
- நாளை 2022 ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக ஜடேஜாவை தேர்வு செய்து அறிவித்திருக்கிறது அந்த அணி நிர்வாகம்
- விராட் கோலியை அடுத்து தோனி கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகி இருப்பது ’ஒரு சகாப்தம்’ முடிந்துவிட்டதாக கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்
- “தோனி இருக்கும்போது எனக்கு கவலையில்லை” என கேப்டன் பொறுப்பை ஏற்றது பற்றி ஜடேஜா தெரிவித்திருக்கிறார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்