தமிழ்நாடு:



  • 21 மாநகராட்சிகளுக்கான மேயர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. 

  • நகர்ப்புற உள்ளாட்சி மேயர், துணை மேயர், தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு திமுக கூட்டணி கட்சிகளின் இடஒதுக்கீடு வெளியீடு.

  • சென்னை மாநகராட்சி திமுகவின் மேயர் வேட்பாளராக ப்ரியா ராஜனும், துணை மேயர் வேட்பாளராக மகேஷ் குமாரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  • உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை அழைத்து வர தமிழ்நாடு அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

  • 130 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

  • அதிமுகவில் மீண்டும் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை இணைப்பது தொடர்பாக ஒபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியா:



  • உத்தரப்பிரதேச மாநிலத்தின் 6ஆவது கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 57 சதவிகிதம் வாக்குப்பதிவு.

  • ஆந்திர முதல்வர் ஜெகனின் 3 தலைநகர் திட்டம் ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

  • ஆந்திராவின் தலைநகரம் அமராவதி மட்டும்தான் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

  • தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு பேரிடர் மீட்பு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.


உலகம்:



  • உக்ரைனிலுள்ள அணுமின் நிலையத்தின் மீது ரஷ்ய படைகள் தாகுதல் நடைத்தி வருகின்றன.

  • உக்ரைன்-ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை எனத் தகவல்.

  • உக்ரைனியர்கள் மற்றும் ரஷ்யர்கள் ஒரே மக்கள் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

  • ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் 33 பேர் பலியாகியுள்ளதாக தகவல்.

  • ரஷ்யாவிற்கு கார் உற்பத்தியை நிறுத்த டயோட்டா நிறுவனம் முடிவு.


விளையாட்டு:



  • இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

  • இந்திய அணியின் வீரர் விராட் கோலி இன்று தன்னுடைய 100ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறார்.

  • மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இன்று நியூசிலாந்தில் தொடங்குகிறது. 

  • வரும் 6ஆம் தேதி நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதுகின்றன.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண