தமிழ்நாடு : 



  • மத்திய அரசு பிற்போக்கு கருத்துகளை புகுத்துவதை தடுக்க கல்வியை முழுமையாக மாநில பட்டியலுக்கு மாற்றுவதே தீர்வு : துணை வேந்தர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு 

  • தமிழ்நாட்டில் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக அமையும் வகையில் ஒரு ரூபாய் செலவு செய்தாலும் சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கு சென்றடைய வேண்டும் : முதலமைச்சர் பேச்சு 

  • அரசு மருத்துவமனை காலிபணியிடங்களில் இனி ஒப்பந்த முறையில் இல்லாமல் நிரந்தர பணியாளர்களே நியமனம் : மா. சுப்பிரமணியன் 

  • நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் : உயர்நீதிமன்றம் உத்தரவு; சிறையில் இருந்து வெளியே வந்தார் ஜெயக்குமார்

  • வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் வரும் 13 ம் தேதி முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 


இந்தியா : 



  • பேடிஎம் நிறுவனத்தின் பேமன்ட்ஸ் வங்கி, புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. 

  • காங்கிரஸ் விரும்பினால் 2024 தேர்தலில் இணைந்து போட்டியிடலாம்: மம்தா பானர்ஜி

  • மத்திய பிரதேசத்தில் முதல் டிரோன் பயிற்சி பள்ளியை முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் திறந்து வைத்தார். 

  • சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 26 ல் தொடங்கும் என சிபிஎஸ்இ அறிவிப்பு 

  • பிரபல உணவு விநியோகிக்கும் நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜோமோட்டோவின் செயலிகள் திடீரென செயல்படவில்லை.

  • போர் காரணமாக உக்ரைனில் படித்துத் தாய்நாடு திரும்பிய மாணவர்களின் நலனுக்காக கேரள அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.


உலகம் : 



  • உக்ரைன் படைகளுக்கு எதிராக விருப்பமுள்ள தன்னார்வலர்கள் போரிட அனுமதிக்க விரும்புவதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். 

  • சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

  • மத்திய அமெரிக்க நாடான கவுத்மாலாவில் கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு 


விளையாட்டு :



  • இந்தியாவும் இலங்கையும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு பெங்களூரில் அமைந்துள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. 

  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் விலகியதால் அவருக்கு பதிலாக ஆரோன் பிஞ்ச் சேர்க்கப்பட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண