தமிழ்நாடு:



  • சிவகங்கையில் இன்று புதிய திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

  • மேகதாது அணை விவகாரத்தை காவிரி நதிநீர் ஆணையத்தில் விவாதிக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.

  • எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் சமூக நலத்துறைக்கு மாற்றம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

  • திருவாரூர் மாவட்டத்தில் வீடு கட்டும் இடத்தில் ஐம்பொன் சிலைகள் கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

  • கரூர் மாணவனின் செயற்கைக் கோள் செப்டம்பரில் நாசா விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக தகவல்.


இந்தியா:



  • ஹைதராபாத் பாலியல் சம்பவம் தொடர்பாக எம்.எல்.ஏ மகன் உள்ளிட்ட நான்கு பேர் சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

  • வரும் 21ஆம் தேதி பிரதமர் மோடி மைசூரு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

  • அமலாக்கத்துறை முன் ஆஜராவதிலிருந்து அவகாசம் கோரி சோனியா காந்தி மனு.

  • மாநிலங்களவைத் தேர்தலை முன்னிட்டு ராஜஸ்தான்,ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் எம்.எல்.ஏக்கள் சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

  • குறுகிய நேரத்தில் 75 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை அமைத்து மத்திய போக்குவரத்துறை கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 

  • இமாச்சல் பிரதேசத்தில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பநிலை அதிகரித்துள்ளது. 

  • டெல்லியில் உள்துறை அமைச்சகத்தில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

  • கிரிப்டோ கரன்சி மீதான வரி விதிப்பை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்.


உலகம்:



  • இலங்கையில் அடுத்த 3 வாரங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு இருக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

  • ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆஃப்ரிக்கா பகுதிகளில் தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 

  • சீனாவில் கனமழை காரணமாக 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.

  • மெக்சிகோவில் படகு கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்துள்ளனர்.


விளையாட்டு:



  • செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒலிம்பிக் சுடர் ஓட்டம் முதல் முறையாக இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

  • பிரஞ்சு ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற ரஃபேல் நடால் உலக தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண