நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பு வகித்தவர் பிபின்ராவத். கடந்தாண்டு டிசம்பர் 8-ந் தேதி குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், நாட்டின் அடுத்த முப்படைகளின் தலைமை தளபதி யார்? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், நாட்டின் அடுத்த முப்படைகளின் தலைமை தளபதி யார் என்பதை தேர்வு செய்வதற்காக இந்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 62 வயதுக்குட்பட்ட ஓய்வு பெற்ற அல்லது பதவியில் உள்ள லெப்டினன் ஜெனரல், ஏர் மார்ஷல் மற்றும் வைஸ் அட்மிரல் அல்லது ஆகியோர் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று விமானப்படை, ராணுவம் மற்றும் கடற்படை ஆகியவற்றில் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளது.
முப்படைகளின் தலைமை தளபதிக்கு விண்ணப்பப்பிவர் ஏர் மார்ஷலாக அல்லது ஏர் சீப் மார்ஷலாக பணியாற்றியோ அல்லது பணியாற்றி ஓய்வு பெற்றவராகவோ இருக்க வேண்டும். ஆனால், அவர் 62 வயதை எட்டியிருக்கக்கூடாது. ஆனால், இந்த வயது அதிகரிப்பை 65 ஆக அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய ராணுவத் தலைமை தளபதியாக பொறுப்பு வகித்த பிபின் ராவத் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்