தமிழ்நாடு:



  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம் மேற்கொண்டுள்ளார்.

  • தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

  • தமிழ்நாட்டில் அனைத்து அரசு பேருந்துகளிலும் இ-டிக்கெட் விரைவில் வழங்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

  • அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

  • கருமுட்டை விற்பனை தொடர்பாக சேலம்,ஈரோடு, ஓசூர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

  • சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறையினர் ஆய்வு ரத்தாகி உள்ளதாக தகவல்.


இந்தியா:



  • இந்திய ராணுவத்தை நவீன மயப்படுத்த 76000 கோடி ரூபாய் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்.

  • இந்தியாவில் ரூபாயை பயன்படுத்தி சர்வதேச வர்த்தகம் நடைபெற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

  • பல்கலைக் கழகத்தின் வேந்தர்களை முதலமைச்சர் நியமிக்கும் சட்டத்திற்கு மேற்கு வங்க சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

  • அக்னி 4 ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. 

  • இணையதள சந்தை மூலம் பருத்தி அதிக விலைக்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • 2006ஆம் ஆண்டு வாரணாசியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி வலியுல்லாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  • மாவட்டம் தோறும் முதியோர் இல்லம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


உலகம்:



  • பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். 

  • ஜெர்மனியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

  • சீனாவின் ஷாங்காய் நகரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

  • பிலிப்பைன்ஸ் மவுண்ட் புலூசன் எரிமலை தொடர்ந்து வெடித்து வருவதால் அப்பகுதியில் கடும் சாம்பல் புகை சுற்றியுள்ளது.

  • உக்ரைன் தலைநகர் கீவிலுள்ள ரயில் பணிமணை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. 

  • காங்கோவில் நடைபெற்ற தாக்குதலில் 36 உயிரிழந்துள்ளனர்.


விளையாட்டு:



  • தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் நேற்று பயிற்சியை தொடங்கியது. 

  • லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண