தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் ஜூன் மற்றும் செப்டம்பர் மாதம் நடைபெறும் தேர்வுகளை எழுத வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வேண்டுகோள்.
- சென்னை மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
- பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா:
- பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு வசதியாக இருக்கும் படி 1,2,5,10,20 ரூபாய் நாணயங்களை மத்திய அரசு இன்று வெளியிட உள்ளது.
- இந்தியாவில் 36 கோடி ரூபாய் செலவில் 8 கப்பல்கள் தயாரிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
- 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியா தன்னுடைய எரிசக்தி தேவையில் 50% புதுப்பிக்கதக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாட்கள் பயணமாக வியட்நாம் செல்ல உள்ளார்.
- காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று டெல்லி காங்கிரஸ் சார்பில் கோரிக்கை.
- அசாமில் மூங்கில் பாலம் உடைந்து 4 பேர் தண்ணீரில் தத்தளித்துள்ளனர்.
- உத்தரகாண்ட் பகுதியில் பேருந்து விழுந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம்:
- பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள மவுண்ட் புலூசான் எரிமலை வெடித்து கங்குகளை வெளியே கக்கி வருகிறது.
- மேற்கத்திய நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆயுதம் அளித்தால் இதுவரை தாக்குதல் நடத்தாத பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
- நைஜீரியா நாட்டிலுள்ள தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஜாமீன் மனு தள்ளுப்படி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
- இலங்கையில் நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்.
- அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
விளையாட்டு:
- பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் 14வது முறையாக ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
- ஆடவர் ஒற்றையர் பிரிவில் இதன்மூலம் 22 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டங்களை வென்று நடால் அசத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்