முகமது நபி குறித்து சர்ச்சைக் கருத்தினை தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா. பாஜகவிலிருந்து நீக்கப்பட்டப் பின் சர்ச்சைக்குரிய கருத்தை திரும்ப பெறுகிறார்.
அண்மையில் தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்தார். அதையடுத்து காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனாபோன்ற கட்சியினர் அவர்மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறித்தி வந்தனர். மேலும் இது கடவுள் நம்பிக்கை உள்ள மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக அவர் கருத்து உள்ளாதாக நாடு முழுவதும் பெரும் விவாதப்பொருளாக உருவானது. இப்படியான பெரும் சர்ச்சைக்கு மத்தியில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு பாஜகவின் நவீன்குமார் ஜிண்டாலும் ஆதரவான கருத்தினை டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
கட்சியிலிருந்து இடை நீக்கம்
இது மேலும் விவாதத்தினை அதிகப்படுத்திய நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் இன்று நுபுர் சர்மா மற்றும் நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்வதாக தெரிவித்தது.மேலும் பாஜக அனைத்து மதத்தவர்களின் நம்பிக்கைக்கு எதிரான கட்சி அல்ல எனவும் தெரிவித்தது. எந்த மத்தினைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மதப் பிரமுகராக இருந்தாலும் பாஜக அவர்களை மதிக்கும், மேலும் அவர்களை அவமதிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் பாஜக ஆதரிப்பதோ ஊக்குவிப்பதோ இல்லை எனவும் தெரிவித்திருந்தது. மேலும் எந்தவொரு மதத்தினை அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் சித்தாந்தத்திற்கும் பாஜக எப்போதும் எதிராக உள்ளது எனவும் குறிப்பிட்டு நுபுர் சர்மா மற்றும் நவீன்குமார் ஜிண்டாலையும் இடைநீக்கம் செய்தது.
நிபந்தனையின்றி திறும்ப்ப பெறுகிறேன்
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நுபுர் சர்மா தற்போது தான் தெரிவித்த கருத்தை திரும்பப் பெறுவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ”விவாதத்தில் பதிலடியாகப் பேசும் போது சில வார்த்தைகளைச் சொன்னேன். அந்த வார்த்தைகள் யாரேனும் ஒருவரின் மனதை புண்படுத்தியிருந்தால், மத நம்பிக்கையை காயப்படுத்தியிருந்தால் எனது வார்த்தைகளை நிபந்தனையின்றி திரும்பப் பெறுகிறேன், யாருடைய நம்பிக்கையினையும் புண்படுத்துவது எனது நோக்கமில்லை” எனவும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்