தமிழ்நாடு:



  • அதிமுக தலைமை கழக நிர்வாகிகளின் கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது. 

  • அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்துள்ளார்.

  • தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

  • மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை.

  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. 

  • தமிழ்நாட்டில் இன்று முதல் பிளஸ்-1 வகுப்புகள் தொடங்குகின்றன.


இந்தியா:



  • ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். 

  • தொழில்துறை 4.0 புரட்சியில் இந்தியா முன்னணியில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  • மகாராஷ்டிராவில் ஏக்நாத் சிண்டே மற்றும் ஆதரவாளர்களை தகுதி நீக்கம் செய்ய கோரியதற்கு எதிரான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை.

  • சண்டிகரில் நாளை முதல் இரண்டு நாட்கள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. 

  • குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.


உலகம்:



  • அர்ஜென்டினா நாட்டின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு. 

  • சீனாவின் வர்த்தக கொள்கைக்கு எதிராக 600 பில்லியன் டாலர் நிதி திரட்ட ஜி-7 நாடுகள் முடிவு செய்துள்ளதாக தகவல்.

  • சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல். 

  • ஆஸ்திரேலியாவில் இலகு ரக விமானம் விழுந்த விபத்தில் விமானி ஒருவர் பலியாகியுள்ளார்.

  • ரஷ்ய அதிபர் புதின் துருக்மேனிஸ்தான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.


விளையாட்டு:



  • அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

  • உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய மகளிர் ரிகர்வ் அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண