புதுச்சேரி : ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் 3 தங்கம் பதக்கம் வென்று சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற புதுச்சேரி மாணவி கிருத்திகாவுக்கு ஆசியாவின் இரும்பு பெண்மணி என்ற பட்டமும் வழங்கப்பட்டது. மாணவி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். புதுச்சேரி முதலியார்பேட்டை திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் கிருத்திகா வயது (17). தனியார் பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். கோயமுத்தூரில் நடந்த ஆசிய அளவிலான பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 17-ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடந்தது.
இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவி கிருத்திகா, 69 கிலோ உடல் எடை கொண்ட சப்- ஜூனியர் பிரிவில் பிரிவில் இலங்கை, பூட்டான், நேபாளம், ஓமன்,மாலத்தீவு, ஈரான், மங்கோலியா, கஜகஸ்தான் உள்ளிட்ட 13 ஆசிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் போட்டியிட்டு மாணவி கீர்த்திகா பெண்கள் பிரிவில்185 கிலோ பளு தூக்கும் பிரிவில் முதலிடத்தைப் பிடித்து தங்கம் வென்றார். இதேபோல் 85 கிலோ பெஞ்ச் பிரஸ் போட்டியில் முதலாவது இடத்தைப் பிடித்து தங்கம் வென்றார். ஒரு போட்டியில் வெள்ளி வென்ற இவர் சப்-ஜூனியர் பிரிவில் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றார்.
சப்- ஜூனியர் பிரிவில் இரண்டு தங்கம் ஒரு வெள்ளியும், ஓவரால் வெற்றி பெற்றமைக்காக ஒரு தங்கம் என மூன்று தங்கம் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவி கிருத்திகாவுக்கு சேம்பியன்ஷிப் பட்டத்துடன் "ஆசியா இரும்புப் பெண்மணி" என்ற பட்டமும் வழங்கப்பட்டது. ஆசிய பவர்லிப்டிங் போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்ற மாணவி கிருத்திகாவை சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். மேலும் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று புதுவைக்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியின் போது கிருத்திகாவின் தந்தை முருகானந்தம், பயிற்சியாளரும் தீயணைப்புத்துறை வீரருமான பாக்கியராஜ், பாண்டிச்சேரி பவர்லிப்டிங் சங்க செயலாளர் பிரவீன் ஆகியோர் உடன் இருந்தனர்.
OPS INTERVIEW : "சதி செய்தவர்களுக்கு மக்களே தண்டனை வழங்குவார்கள்" - ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்