தமிழ்நாடு:
- 7,301 பதவிகளுக்கு குரூப் 4 தேர்வு : தமிழ்நாடு முழுவதும் 18.50 லட்சம் பேர் எழுதினர்.
- தமிழ்நாட்டில் அதிக வரி செலுத்திய காரணத்திற்காக, நடிகர் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை விருது வழங்கி கவுரவித்துள்ளது.
- தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில், கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை
- டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் நேற்று முதல் ஜூலை 27-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
- ஆசிரியர்கள் வகுப்பில் போன் பேசக்கூடாது. மாணவர்களை சொந்த வேலைக்கு அனுப்பக்கூடாது. மனதை பாதிக்கும் எந்த தண்டனையையும் வழங்கக்கூடாது என்பது உள்ளிட்ட 77 உத்தரவுகளை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை
- பிரதமர் மோடி, முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் 28ம் தேதி பிரமாண்ட விழா : ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் தீவிரம்
- உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்களுக்கு மருத்துவம் பயில உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம்
இந்தியா :
- நாடாளுமன்ற வளாகத்தில் 21 குண்டுகள் முழங்க நாட்டின் 15 வது குடியரசு தலைவராக திரவுபதி முர்மு இன்று பதவியேற்பு
- குரங்கு அம்மை பாதிப்பு இந்தியாவில் 4 ஆக உயர்வு : கேரளாவை தொடர்ந்து டெல்லியிலும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது
- சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் நான் : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உருக்கம்
- திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் செல்ல விரும்பவில்லை என குடியரசு தலைவர் தேர்தலில் தோல்வியற்ற யஷ்வந்த் சின்கா பேட்டி
உலகம் :
- தெற்கு ஜப்பான் ககோஷிமாவில் உள்ள சகுராஜிமா எரிமலை வெடித்து தீக்குழம்புகள் வெளியேற்றம்
விளையாட்டு :
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 வது நாள் போட்டி : இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
- 100வது ஒருநாள் போட்டியில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் சதமடித்து சாதனை
- டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு ரூபாய் 18 கோடி செலவு செய்துள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
- உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்