Indian railways : ரயில்பெட்டிகளில் இருக்கும் வண்ணக்கோடுகளின் அர்த்தம் என்ன தெரியுமா? 


இந்திய நாட்டின் போக்குவரத்துக்கு அமைப்புகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்திய இரயில்வே. சுமார் 80%  சரக்குகளையும், 70% பயணிகளையும் ஏற்றி செல்கிறது. ஏப்ரல் 16, 1853இல் தனது முதல் 34 கிமீ பயணத்தை தொடங்கியது. பாதை நீளத்தின் அடிப்படையில் இந்திய ரயில்வே அமைப்பு ஆசியாவிலேயே மிகப்பெரிய அமைப்பாகவும், உலகின் இரண்டாவது பெரிய அமைப்பாகவும் விரிவடைந்துள்ளது. 


நடுத்தர மக்களின் தேர்வு:


நடுத்தர மக்களுக்கேற்ற சிறந்த சிக்கனமான போக்குவரத்துக்கு அமைப்பு  இந்திய இரயில்வே. அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்கள் தேர்வு செய்வது ரயில் பயணம். கட்டணமும் குறைவு, வசதியும் அதிகம் கொண்டது ரயில் பயணம் மட்டுமே. மேலும் வயதானவர்களுக்கு சிறப்பு சலுகைகளும் உள்ளது கூடுதல் சிறப்பு. நாம் அனைவரும் குடும்பத்துடன் பயணிக்க விரும்பும் மிகவும் மகிழ்ச்சியான ஒன்று ரயில் பயணம்.


ரயில்பெட்டிகளில் வண்ண கோடுகளின் அர்த்தம் என்ன? 


இது வெறும் போக்குவரத்திற்காக பயன்படுத்துவது மட்டும் அல்ல. பல அத்தியாவசிய தேவைகளை, சமூக சேவைகளை வழங்கிறது. ரயில்பெட்டிகளில் இருக்கும் வண்ணக்கோடுகளை பற்றி நிறைய கேள்விகள் பலருக்கும் இருக்கும். ரயில்பெட்டிகளில் இருக்கும் வண்ணக்கோடுகள் குறிப்பிடத்தக்க சில செயல்பாடுகளை பற்றி எடுத்துரைக்கின்றன. அவற்றை மற்ற ரயில் பெட்டிகளில் இருந்து வேறுபடுத்தி காட்டுவதற்காக வெவ்வேறு நிறத்தில் வரையப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிற்கும் தனி தனி முக்கியத்துவங்கள் உள்ளன. அவரை பற்றி தெரிந்து கொள்ளுவோம்.



நீலப்பெட்டியில் வெள்ளை கோடுகள்:


ஒரு குறிப்பிட்ட ரயிலில் முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு பெட்டிகள் அவை என்பதை நீலப்பெட்டியில் வெள்ளை கோடுகள் மூலம் அடையாளம் கண்டுகொள்ளலாம். இதன் மூலம் ரயில்கள் நடைமேடையில் வந்து நிற்கும் போது பயனாளிகள் அந்த கோடுகளின் அடிப்படையில் ரயில் பெட்டியை அடையாளம் கண்டு கொள்ள முடியும். 


நீலம் மற்றும் சிவப்பு பெட்டிகளில் மஞ்சள் கோடுகள்:


இந்த வண்ணக்கோடுகள் உள்ள பெட்டிகள் நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது உடல் ஊனமுற்ற பயணிகளுக்கானது என்பதை குறிக்கும் வகையில் மஞ்சள் கோடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 


சாம்பல் நிறப்பெட்டிகளில் பச்சை நிற கோடுகள்:


இது பெண்களுக்கான சிறப்பு ரயில் பெட்டிகள் என்பதை அடையாளம் காட்டுவதற்காக சாம்பல் நிறப் பெட்டிகளில் பச்சை நிறத்தில் கோடுகள் போடப்பட்டு இருக்கும். 
   
சாம்பல் பெட்டிகளில் சிவப்பு கோடுகள்


EMU/MEMU ரயில்களில் உள்ள முதல் வகுப்பு பெட்டிகள் சாம்பல் பெட்டிகள். அதை அடையாளம் காட்டுவதற்காக அதில் சிவப்பு நிறத்திலான கோடுகள் போடப்பட்டு இருக்கும்.