தமிழ்நாடு: 



  • செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை 

  • சின்னசேலம் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்ய ஜிப்மர் டாக்டர்கள் நியமனம்

  • சிபிஎஸ்இ 12 மற்றும் 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு : சென்னை மண்டலம் 3 ம் இடம் பிடித்து சாதனை 

  • 5 நாள் பயணமாக டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார்.

  • கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக் கொள்ள அவரது பெற்றோர்கள் சம்மதம்.உடல் ஒப்படைக்கப்பட்டது

  • கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர அவகாசம் மீண்டும் நீட்டிப்பு


இந்தியா : 



  • சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 94.40% பேர் தேர்ச்சி 

  • கேரளாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை : எண்ணிக்கை 3ஆக அதிகரிப்பு

  • கேரளாவில் ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தகவல்

  • குடியரசு தலைவர் தேர்தலில் கட்சி மாறி ஓட்டு : துணை குடியரசு தலைவர் தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் பின்னடைவு 

  • உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்களுக்கு இந்திய கல்லூரிகளில் இடமளிக்க முடியாது : மக்களவையில் மத்திய அரசு தகவல் 

  • முதல் முறையாக 25 நிமிடங்களில் முடிந்தது காவிரி ஆணையக் கூட்டம் : மேகதாது குறித்து விவாதம் இல்லை


உலகம் :



  • கொழும்புவில் தொடர் போராட்டம் நடத்தி வந்த போராட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல் : ஐ.நா. கடும் கண்டனம் 

  • இலங்கையில் பிரதமர் உட்பட்ட புதிய அமைச்சரவை பதவியேற்பு

  • ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் ஒருவர் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

  • இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்தன நேற்று பதவியேற்றார்.


சினிமா :



  • 68வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் தமிழில் வெளியான திரைப்படங்கள் 10 விருதுகளை குவித்துள்ளது.

  • 68வது தேசிய திரைப்பட விருது விழாவில் நடிகர் சூர்யா சிறந்த நடிகராக தேர்வு 

  • தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த  சூரரைப்போற்று திரைப்படம் ஐந்து விருதுகளை குவித்துள்ளது.


விளையாட்டு :



  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

  • இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரு போட்டிகளில் ஆடமாட்டார் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

  • உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் எல்தோஷ் பால் மற்றும் ரோகித் யாதவ் இறுதிப் போட்டிக்கு தகுதி

  • உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தல்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண