தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டிற்கு 69 டிஎம்சி நீரை கர்நாடகா தற்போது வரை திறந்துள்ளது. 

  • சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிமுக அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது.

  • தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

  • தமிழ்நாட்டின் உளவுத்துறை ஐஜியாக செந்தில்வேலன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • சென்னை அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் வரும் 29ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்.

  • கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக தந்தை தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.


இந்தியா:



  • குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணி முதல் எண்ணப்பட உள்ளது. 

  • அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜராகிறார்.

  • இந்திய கடற்படையின் விக்ரமாதித்யா போர் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

  • ரயில்வே துறைக்கு தற்போது வரை 260 கோடி ரூபாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்.

  • பாரதியார் பாடலை தமிழில் பாடிய அருணாச்சலப் பிரதேச சகோதரிகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.


உலகம்:



  • உலகளவில் 14 ஆயிரம் பேருக்கு மேல் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தகவல்.

  • இலங்கையின் 8வது அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்கிறார்.

  • வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐ.நா பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளதாக தகவல்.

  • இங்கிலாந்து பிரதமர் தேர்தலுக்கான கடைசி சுற்றுக்கு ரிஷி சுனக் முன்னேறியுள்ளார்.

  • ஆஃப்கானிஸ்தானுக்கு மிகவும் நெருங்கிய நாடாக இந்தியா உள்ளதாக அந்நாட்டில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் தகவல்.


விளையாட்டு:



  • வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. 

  • உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் அனு ராணி பங்கேற்றுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண