கர்நாடகா மாநிலம், கடக் மாவட்டத்தில் எருமை மாட்டை சிறப்பு விருந்தினராகக் கொண்டு பேருந்து நிழற்குடை திறக்கப்பட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.


கர்நாடகா மாநிலம், கடக் மாவட்டத்தில் உள்ள பலேஹசூர் கிராம மக்கள் தங்களுக்கு பேருந்து நிழற்குடை அமைத்துத் தருமாறு அப்பகுதி அரசு அலுவலர்களிடம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.


கோபத்தை வெளிப்படுத்திய கிராம மக்கள்


ஆனால் அரசும் அரசு அலுவலர்களும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமலேயே இருந்து வந்துள்ளது. அப்பகுதியில் ஏற்கெனவே இருந்த சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிழற்குடை இடிந்து விழுந்த நிலையில், முன்னதாக மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.


ஆனாலும் அரசு அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கிராம மக்கள் தங்களுக்குள்ளேயே சிறிதளவு பணம் திரட்டி தென்னை ஓலைகளால் தற்காலிக தங்குமிடம் அமைத்துள்ளனர்.


நூதன கவன ஈர்ப்பு விழா


இந்நிலையில், தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், அரசு அலுவலர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் எருமை மாடு ஒன்றினை சிறப்பு விருந்தினராகக் கொண்டு இந்த தற்காலிக நிழற்குடையைத் திறந்து வைத்துள்ளனர்.


 






பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி பலரும் இந்த இடத்தின் பேருந்து சேவையை பயன்படுத்தி வரும் நிலையில், தங்களைக் கண்டுகொள்ளாத அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் எருமை மாட்டை சிறப்பு விருந்தினராகக் கொண்டு நடந்த இந்தத் திறப்பு விழா நிகழ்ச்சி கவனத்தை ஈர்த்துள்ளது.




மேலும் படிக்க: Watch Video: சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ்... 4 பேர் பலி... அதிர்ச்சி தரும் வீடியோ!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண