தமிழ்நாடு:



  • தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடும் வகையில் அரசு கட்டிடங்கள் வண்ணமையமாக காட்சியளிக்கின்றனர்.

  • கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீடு திரும்ப உள்ளார்.

  • செஸ் ஒலிம்பியாட் காரணமாக அழங்கரிக்கப்பட்டுள்ள நேப்பியர் பாலத்தை காண மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. 

  • மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 15 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இந்தியா:



  • நாடாளுமன்றத்தின் மழை கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. 

  • அக்னிபத், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்.

  • இந்தியா-சீனா அதிகாரிகள் இடையே சுமார் 20 மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

  • குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் மார்கரேட் ஆல்வா வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • குடியரசுத் தலைவர் தேர்தலின் காரணமாக கொல்கத்தாவில் பாஜக எம்.எல்.ஏக்கள் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


உலகம்:



  • ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள காட்டு தீயை அணைக்க அதிகாரிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

  • இங்கிலாந்து நாட்டில் இரு நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  • இலங்கையில் இரண்டு வாரங்களுக்கு பிறகு பெட்ரோல்,டீசல் விலை குறைந்துள்ளது. 

  • சிலியில் நடைபெற்ற குளிர்கால விழாவில் மக்கள் உற்சாக கொண்டாட்டம்.

  • உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் தலைமை வழக்கறிஞர் ஆகிய இருவரையும் அதிபர் ஸ்லென்ஸ்கி நீக்கி உத்தரவிட்டுள்ளார்.


விளையாட்டு:



  • இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் சதத்தால் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

  • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

  • பாராசின் ஓபன் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண