தமிழ்நாடு: 



  • சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

  • சென்னையில் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. 

  • நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 4 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் அரசு மருத்துவமனைக்குள் மழை நீர் தேங்கியுள்ளது.

  • பதவி வேண்டாம் என்றால் அதிமுகவிற்கு எதிராக ஏன் பிரச்னை செய்ய வேண்டும் என்று ஒபிஎஸ் தரப்பிற்கு ஈபிஎஸ் கேள்வி.

  • பாளையங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

  • இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்ததை கண்டித்து இன்று முதல் மீனவர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

  • நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்தியா:



  • இந்தியாவில் மின்சார வாகன தயாரிப்பு துறைக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  • பிரதமர் மோடியின் தலைமையில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது என்று ஜப்பான் பிரதமர் பாராட்டு.

  • ராணுவத்திற்கான உபகரணங்கள் உள்நாட்டில் தயாரிக்க 3 வது பட்டியலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்.

  • லடாக்கில் பாலம் அமைத்து இந்திய ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

  • நொய்டாவில் விதிமுறை மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுர கட்டிடங்கள் 20 கோடி ரூபாய் செலவில் இடிக்கப்பட்டது.

  • நொய்டா கட்டிட கழிவுகளை அகற்ற 3 மாதங்கள் வரை ஆகலாம் என்று அரசு கணிப்பு.

  • குஜராத்திலிருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 38 கிலோ ஹெராயின் பஞ்சாப்பில் பறிமுதல்.

  • சோனாலியின் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


உலகம்:



  • இரண்டு அமெரிக்கா கப்பல்கள் சீனாவின் எச்சரிக்கையை மீறியும் தைவான் கடற்பகுதியை கடந்துள்ளன. 

  • லிபியாவில் நடைபெற்ற கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. அதில் 33 பேர் பலி மற்றும் 140 பேர் காயம் அடைந்துள்ளனர்.

  • போலாந்து நாட்டில் நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நிலக்கரி ஹீட்டரை பயன்படுத்த தவித்து வருகின்றனர்.

  • மறைந்த இளவரசி டயானாவின் கார் ஏலத்தில் ரூ.5.18 கோடிக்கு விற்பனை அடைந்துள்ளது. 


விளையாட்டு:



  • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

  • தேசிய விளையாட்டு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்த் 117வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

  • பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக விளையாடி பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் அசத்தினார்.