தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. 

  • அரசு பள்ளிகள் அருகே உள்ள மதுக்கடைகள் அகற்றம் செய்யப்பட உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.

  • கனியாமூர் கலவரத்தில் வாகனங்களை சேதப்படுத்திய 2 பேர் வீடியோ ஆதாரத்தின் பெயரில் கைது.

  • மின்சாரத்திற்கான பணம் செலுத்தியாகிவிட்டது என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.

  • தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்.

  • கோவை,ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களுக்கு 3 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 23ஆம் தேதி செல்ல உள்ளார். 

  • பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆவணங்கள் மாயமாகி உள்ளதாக தகவல்.

  • பவானி ஆற்றில் கான்கிரீட் பாலம் அடித்து செல்லப்பட்டுள்ளது. 

  • அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் நகையை வீட்டில் வைத்திருந்த இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் சஸ்பெண்ட்.


இந்தியா:



  • டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிஷோடியாவின் வீட்டில் 13 மணி நேர சோதனை நிறைவு பெற்றது. 

  • கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். 

  • கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மும்பையில் நேற்று களைகட்டிய உறியடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 

  • வரும் 2030ஆம் ஆண்டிற்கு 50 டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை இந்தியாவில் செய்ய இலக்கு என்று மத்திய அமைச்சர் ஜித்தேந்திர டோமர் தெரிவித்துள்ளார்.

  • கேரளாவில் தங்க கடத்தலுக்கு காரணமாக தமிழ சுங்கத்துறை அதிகாரி கைது.

  • இமாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.

  • ஜல் ஜீவன் இணைப்பு மூலம் 7 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தகவல்.

  • என்னுடைய சிறுவயதில் ராணுவத்தில் சேர முயன்றேன் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.


உலகம்:



  • இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு போர் விமான பயிற்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

  • நியூயார்க்கில் காந்தி சிலையை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தினர்.

  • காபூலில் மீண்டும் இந்திய தூதரகம் திறக்கப்பட்டுள்ளது. 

  • வடக்கு சிரியாவில் ராக்கெட் வீச்சில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • உக்ரைனுக்கு மேலும் 775 மில்லியன் டாலர் ராணுவ உதவியை அமெரிக்கா வழங்குகிறது. 

  • பூடானில் நிலவி வரும் பொருளாதார நிலை காரணமாக இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடு. 

  • தென் அமெரிக்கா நாடுகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம்.


விளையாட்டு:



  • இந்தியா-ஜிம்பாவே அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. 

  • யு-20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த அந்திம் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.