தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியேற்றுகிறார்.

  • சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் 1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • சென்னையிலுள்ள வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட 32 கிலோ தங்கத்தில் 18 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

  • கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது மாடுகளை கொள்ளை அடித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று ஆவின் நிறுவனம் மூவர்ண குல்ஃபியை அறிமுகம் செய்து வைக்க உள்ளது.


இந்தியா:



  • நாட்டின் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. 

  • டெல்லியின் செங்கோட்டையில் இன்று பிரதமர் மோடி தேசிய கோடியை ஏற்றுகிறார்.

  • செங்கோட்டையில் கொடியை ஏற்றிவிட்டு பிரதமர் மோடி சுகாதாரத்துறை தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல்.

  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக கவனத்தை ஈர்த்துள்ளதாக குடியரசுத் தலைவர் த்ரௌபதி முர்மு பெருமிதம்.

  • சீனாவின் உளவுக் கப்பல் இலங்கைக்கு வர அனுமதி அளிக்கப்பட்டதால் ஏற்படும் சவால் ஏற்க தயார் என்று மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.

  • ஒடிசா மாநிலத்தின் ஹிராகுண்ட் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் காரணமாக அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் கரை புறண்டு ஓடுகிறது.

  • சுதந்திர தினத்தை முன்னிட்டு பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் தன்னுடைய வீட்டில் தேசிய கொடியை ஏற்றினார்.


உலகம்:



  • பாகிஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியாவை பாராட்டி இம்ரான் கான் பேசியுள்ளார்.

  • அமெரிக்காவில் தாக்கப்பட்ட பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • அமெரிக்க எம்பிக்கள் குழு இன்று தைவான் சென்றுள்ளது.

  • சுவட்சர்லாந்தில் இரண்டு ஆண்டுகளுக்கு நேற்று பிரம்மாண்ட இசை திருவிழா நடைபெற்றது.

  • 106 நாட்களில் 106 மாரத்தான் பந்தயங்களில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பெண் கேட் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.


விளையாட்டு:



  • இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜிம்பாவேயில் உள்ள தூரகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் கொண்ட உள்ளதாக தகவல்.

  • ஜிம்பாவே அணியுடனான ஒருநாள் தொடர் வரும் 18ஆம் தேதி முதல் தொடங்குகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண