தமிழ்நாடு:



  • கல்வி நிறுவனங்களில் மத அடையாள உடைகளை அணிய தடை கோரி மனு : உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை 

  • சென்னை வந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

  • வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 

  • தமிழர்கள் மொழி, அடையாளம் மிக்கவர்கள், மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள் : உயர்நீதிமன்ற விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேச்சு 

  • சென்னை ஐஐடியில் மொத்தம் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி 

  • வடபழனி முருகன் கோயில் உள்பட 10 கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் நேற்று முதல் தொடங்கியது. 


இந்தியா : 



  • பிரதமர் மோடி இன்று ஜம்மு-காஷ்மீர் பயணம் : பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு 

  • மருத்துவ சிகிச்சைக்காக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று அமெரிக்கா பயணம் 

  • பாகிஸ்தானுக்குச் சென்று உயர் கல்வி பயின்றால் இந்தியாவில் வேலை கிடையாது : யுஜிசி, ஏஐசிடிஇ அறிவிப்பு 

  • ரயிலில் சர்ச்சைக்குரிய செய்தித்தாள் வழங்கப்பட்ட விவகாரத்தில், ஐஆர்சிடிசி சம்பந்தப்பட்ட உரிமதாரருக்கு எச்சரிக்கை


உலகம் :



  • சீனாவில் 3 வயது சிறுமியை காட்டு குரங்கு ஒன்று தாக்கி இழுத்துக்கொண்டு செல்லும் வீடியோ இணையத்தில் வைரல்

  • ஆப்கானிஸ்தானில் மசூதியை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள் உள்பட 33 பேர் பலி 

  • போஸ்னியா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு 

  • கொரோனா விதிமுறைகளை மீறியதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அபராதம் 


விளையாட்டு :



  • பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

  • கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண