தமிழ் சினிமா மட்டுமல்லாது மலையாளம் ,தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பன்மொழி திரைப்படங்களில் அசத்தி வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். பிரகாஷ் ராய் என்ற இயற்பெயர் கொண்ட இவரின் பெயரை இயக்குநர் பாலச்சந்தர்தான் பிரகாஷ் ராஜ் என மாற்றினாராம். தற்போது இந்தியாவிம் முக்கிய மொழி திரைப்படங்களில் வில்லன் மற்றும் சிறந்த குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தனக்கு கொடுக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதோடு ஒன்றி நடிப்பவர்களுள் ஒருவர் பிரகாஷ் ராஜ்.
நடிப்பு ஒருபுறம் இருந்தாலும், சமுகம் சார்ந்த விசயங்களுக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதிலும், குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக இவரது கருத்துகள் ஆணித்தரமாக இருக்கும். சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு நிகழ்ச்சியில் இந்தியர்கள் அனைவரும் இந்தியை படியுங்கள் என்ற கருத்தை தெரிவித்தார். அதற்கு, தமிழ்நாடு பக்கத்தில் இருந்து பல எதிர்ப்புகள் எழுந்தாலும், கர்நாடகா மாநிலத்தில் இருந்து முதல் குரலாக பிரகாஷ் ராஜ் குரலே இருந்தது.
அந்தவகையில், தற்போது இந்திய பிரதமர் மோடி குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அது நாடுமுழுவதும் தீயாய் பரவி வருகிறது. அதில், அவர் டீ விற்றதை நம்பியவர்கள்.. அவர் நாட்டையும் விற்கிறார் என்று சொன்னால் நம்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரகாஷ் ராஜ் 5 முறை தேசிய விருது பெற்ற நடிகர் . அவற்றுள் ஒன்று சிறந்த தயாரிப்பாளருக்கான விருது. படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தும் இருக்கிறார்.கிட்டத்தட்ட 7 மொழிகளை சரளமாக பேசக்கூடியவர். இறுதியாக அவர், யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2 படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் கருத்துக்களுக்கு எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து ப்ரகாஷ்ராஜ் என்னும் பெயரில் ட்ரெண்ட் செய்கிறார்கள் நெட்டிசன்கள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்