தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்கள் கன மழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

  • நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் இன்று கூடுகிறது. வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மாணியக் கோரிக்கைமீது விவாதம்

  • சென்னையில் 12வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை

  • தமிழ்நாட்டில் வருகிற 24-ம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெறுமென தமிழ்நாடு அரசு அறிவிப்பு


இந்தியா:



  • பிரதமர் மூன்று நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார்

  • இன்று முதல் இந்தியாவில் உள்ள 11 மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

  • அரசு முறை பயணமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்

  • ஹரியானாவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து. தீயை அணைக்கும் பணி தீவிரம்

  • டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு. 500% மடங்கு பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்


உலகம்:



  • உக்ரைனுக்கு ஆயுதங்கள் ஏற்றி சென்ற விமான சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது

  • உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமாக கார்கீவில் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமாகியுள்ளது

  • இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதி. தொடர்ந்து ராஜபக்சே அரசை கண்டித்து மக்கள் போராட்டம்

  • தென்னார்பிகா டர்பன் மாகாணத்தில் கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் 443 பேர் உயிரிழப்பு


விளையாட்டு:



  • ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில், பஞ்சாப் அணியை ஹைதராபாத் அணியும், சென்னை அணியை குஜராத் அணியும் தோற்கடித்துள்ளது

  • இன்று நடைபெற இருக்கும் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடரஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண