தமிழ்நாடு:



  • 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை தீவுத்திடலில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

  • திருசெந்தூர் கோயிலுக்கு நேற்று ஒரே நாளில் அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.

  • டெட் தேர்விற்கான புதிய பாடத்திட்டம் அறிவிப்பு. புதிய பாடத்திட்டத்தின் மூலம் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • திமுக ஆட்சியில் 10 மாதங்களில் 1 லட்சம் இலவச மின் இணைப்பு என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

  • தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.


இந்தியா:



  • நாடு முழுவதும் உள்ள தேவாலையங்களில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தணை நடைபெற்றது. 

  • டெல்லியில் நடைபெற்ற ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இரு தரப்பினரிடையே மோதல்.

  • இ-சஞ்சீவனி சுகாதார திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சர் தொடங்கி வைத்தார்.

  • கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

  • திரிணாமுல் சட்டமன்ற இடைத்தேர்தலில் சத்ருஹன் சின்ஹா வெற்றி பெற்றுள்ளார்.

  • டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு.


உலகம்:



  • ஆஃப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வெளி தாக்குதலில் 30 பேர் பலி என தகவல்.

  • சீனாவின் ஷாங்காய் பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன.

  • ரஷ்ய படைகளின் தாக்குதலால் இதுவரை 3000 உக்ரைன் வீரர்கள் இறந்துள்ளதாக தகவல்.

  • உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக போலாந்து நாட்டு எல்லையில் காத்திருக்கும் லாரிகள். 

  • உக்ரைன் நாட்டின் 8 நகரங்கள் மீது 53ஆவது நாளாக ரஷ்யா தாக்குதல் 

  • இலங்கையில் 5 நாட்களுக்கு பங்குச்சந்தையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

  • அமெரிக்கா-இங்கிலாந்து நாடுகளில் மக்களை தாக்கும் கல்லீரல் நோய். 


விளையாட்டு:



  • ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வி அடைந்தது. 

  • ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 

  • ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும்  போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண