ஏப்ரல் 16 இன்று சித்திரை பெளர்ணமி நாள் என்று எல்லோருக்கும் தெரியும். அன்று சந்திரன் வசீகரமாக முழுமையாக இருக்கும் என்பதும் சொல்லித் தெரிய வேண்டிய விஷயமில்லை. ஆனால், சூப்பர் மூன் என்பது வழக்கமான நிலவை விட தனிச்சிறப்பானது. சூப்பர் மூன் நாளில் முழு மதி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். அதன் அளவு வழக்கத்தைவிட மிகமிகப் பெரியதாக இருக்கும் என்பதால் இன்னும் பிரகாசமாக காண்போர் மனதைக் கொள்ளையடிக்கும் வகையில் இருக்கும். அளவில் பெரிதாகவும், நிறத்தில் பிரகாசமாகவும் தெரியும் இந்த பிங்க் மூனை சூப்பர் மூன் என்றும் அழைக்கிறார்கள். இது இந்த ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி சரியாக 12.15 மணிக்கு முழுவீச்சில் ஜொலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிங்க் மூன் வார இறுதி நாள் முழுவதுமாக தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்துக்களின் நாட்காட்டியின் படி, இன்றைய தினம் ஹனுமன் ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. எனவே ஹனுமன் ஜெயந்தி நாளில் பிங்க் மூன் நிகழ்வு வருவது இந்துக்களால் நல்ல சமிஞையாகப் பார்க்கப்படுகிறது.
பிங்க் மூன் என்றால் என்ன?
பிங்க் மூன் என்பது நாம் நினைப்பது போல் பிங்க் மூன் என்பது பிங்க் நிறத்தில் இருக்காது. மாறாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இந்த வகை நிலவுக்கு அமெரிக்காவின் மாஸ் ப்ளாக்ஸ் என்ற தாவரத்திலிருந்து பெற்றுள்ளது. மூலிகைச் செடியான இது மாஸ் பிங்க் என்றும் அழைக்கப்படுகிறது. பிங்க் மூனுக்கு ஸ்ப்ரவுட்டிங் கிராஸ் மூன், குரோவிங் மூன், ஃபிஷ் மூன் மற்றும் ஹேர் மூன் என்ற பெயர்களும் உள்ளன.
ஏன் சூப்பர்மூன் என்றழைக்கப்படுகிறது?
நிலவு தனது சுற்றுவட்டப் பாதையில் சுற்றும்போது பூமிக்கு சற்றே நெருக்கமாக வரும் அப்போது தான் இந்த சூப்பர் மூன் நிகழ்வு நடைபெறுகிறது. அவ்வாறாக பூமிக்கு அருகில் வரும்போது நம் பார்வைக்குப் பெரியதாகத் தெரிவதால் அது சூப்பர்மூன் என்றழைக்கப்படுகிறது.
இந்தியாவில் இந்த பிங்க் மூன் தெரியுமா?
தெரியும். இந்த ஆண்டு இந்தியாவில் சூப்பர் மூன் தெரியும். மிகவும் பிரகாசமாகத் தெரியும்.
எப்போது, எங்கு இந்த சூப்பர் மூனைப் பார்க்கலாம்?
இந்த சூப்பர்மூன் உலகின் எல்லாப் பகுதிகளிலுமே வெறும் கண்களால் பார்க்கும்படி தெரியும். இதைப் பார்ப்பதற்கு சரியான நேரம் சந்திரன் உதய நேரம். நாசாவின் கணிப்புப்படி ஏப்ரல் 17 அதிகாலை 12.15 மணிக்கு இந்த நிகழ்வைக் காணலாம். அதுவே இதைக் காண சிறந்த நேரம்.
இந்த ஆண்டு சூப்பர் மூனைப் பார்க்க உலகம் முழுவதும் உள்ள வானியல் ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர்.