தமிழ்நாடு:



  • மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம். 

  • தென் தமிழகத்தில் சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. மேலும் 2 நாட்களுக்கு டெல்டா பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு.

  • தமிழ்நாட்டில் வரும் 16ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

  • மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று பட்டாபிஷேகம் திருவிழா நடைபெறுகிறது. 

  • தேனி நகராட்சித் தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர் பேசும் கமிஷேன் பேச்சு இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

  • வைகை அணையில் இருந்து சித்திரை திருவிழாவிற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. 

  • சென்னை ஐஐடி மாணவி பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இந்தியா:



  • ஆந்திர அமைச்சரவையில் நடிகை ரோஜாவிற்கு சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கீடு.

  • ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரோப்கார் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.  விபத்தில் சிக்கிய 27 பேர் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளனர்.

  • கர்நாடகவில் இருந்து எஃகு ஏற்றுமதிக்கு இருக்கும் தடையை நீக்கும் வழக்கில் மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. 

  • இந்தியாவில் ஐபோன்  13 உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியுள்ளது. 


உலகம்:



  • உக்ரைன் போர் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் பைடன் ஆலோசனை.

  • பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமர் ஷெபாஷ் ஷெரிஃபிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

  • இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு முயன்று வருகின்றது.

  • பிலிப்பைன்சில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர். 


விளையாட்டு:



  • ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குஜராத் லையன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

  • ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண