உத்தரப்பிரதேசம் லக்கிம்பூரில் உள்ள மின்துறையில் பணிபுரியும் ஊழியரான கோகுல் பிரசாத் என்பவர், வேலைக்கு சென்று வர தனக்கு வெகுநேரம் ஆவதால் இடமாற்றம் வேண்டுமென்று தனது உயரதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு அந்த அதிகாரி, "உங்கள் மனைவியை ஒரு இரவுக்கு அனுப்புங்கள்" என்று கேட்டுள்ளார் இதனால் மனமுடைந்த மின்துறை ஊழியர் கோகுல் தற்கொலை செய்துகொண்டார்.



45 வயதான கோகுல் பிரசாத் தான் வேலை பார்த்து வந்த ஜூனியர் இன்ஜினியர் அலுவலகத்திற்கு வெளியே டீசலை ஊற்றி தீக்குளித்துள்ளார். இதையடுத்து, அங்கு இருந்த அக்கம் பக்கத்தினர் கோகுல் பிரசாத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.


இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக ஜூனியர் இன்ஜினியர் நாகேந்திர குமார் மற்றும் க்ளார்க் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


கோகுல் பிரசாத் தன்னைத்தானே தீக்குளித்து கொள்வதற்கு முன்பாக எடுக்கப்பட்ட வீடியோவில், கடந்த சில ஆண்டுகளாகவே ஜூனியர் இன்ஜினியர் மற்றும் அவரது உதவியாளர் தன்னை துன்புறுத்துவதாகவும், இது தொடர்பாக காவல்துறையை அணுகியபோது அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். 


தொடர்ந்து, கோகுல் பிரசாத் மனைவி இதுகுறித்து தெரிவிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள் கோகுலை சித்திரவதை செய்ததாகவும், மன அழுத்தத்திற்கு ஆளான அவர் நேற்று அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். என் கணவர் தீக்குளிக்க முயன்றபோது அந்த அதிகாரி பார்த்துக்கொண்டே இருந்ததாகவும், இருந்தும் என் கணவரை காப்பாற்ற முயற்சி செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


என் கணவர் லாக்கிம்பூரில் இருந்து அலிகஞ்சிற்கு மாற்றப்பட்டார். இந்த பகுதி தொலைதூரம் இருந்ததால் என் கணவர் பயணம் செய்ய மிகவும் கஷ்டப்பட்டார். எனவே அவர் வீட்டிற்கு அருகில் இடமாற்றம் கேட்டார். அப்பொழுது, அந்த அதிகாரி  'உங்கள் மனைவியை எங்களுடன் ஒரு இரவு இருக்க செய்யுங்கள். நாங்கள் உங்களை இடமாற்றம் செய்வோம்," என்று கூறியதாக கோகுல் மனைவி தகவல் தெரிவித்துள்ளார். 



இந்த சம்பவம் தொடர்பாக மூத்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ் சுமன் கூறும்போது, "ஜூனியர் பொறியாளர் இடமாற்றம் தொடர்பாக முதலில் லைன்மேனிடம் பணம் கேட்டதாகவும், அநாகரீகமாக பேசியதாகவும் வழக்கு பதிவு செய்துள்ளோம். துறை அளவில், ஜூனியர் இன்ஜினியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு, தற்போது தற்கொலைக்கு தூண்டுதல் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண