தமிழ்நாடு:



  • நீட் விலக்கு மசோதா தொடர்பான சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. 

  • நீட் விலக்கு மசோதா தொடர்பான சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் பாஜக பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் நெறிமுறைகள் மீறப்பட்டதால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

  • கச்சதீவு அருகே மீன் பிடித்த 16 ராமேஸ்வர மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.

  • பொது பிரிவினருக்கான மருத்துவ கலாய்ந்தவு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் இன்று நடைபெறுகிறது. 


இந்தியா:



  • மக்களவையில் நேற்று ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார்.

  • மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

  • அடுத்த வாரம் முதல் உச்சநீதிமன்றத்தில் நேரடியாக வழக்கு விசாரணை நடைபெறும்.

  • கோவா மாநில தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது. 

  • நாடு முழுவதும் இதுவரை 170 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

  • தாவூத் இப்ராஹிம் மீது என் ஐஏ வழக்குப்பதிவு

  • அருணாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவில் 7 ராணுவ வீரர்கள் சிக்கியுள்ளதாக தகவல்.


உலகம்:



  • தவறாக விளம்பரம் செய்த குற்றத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு தென்கொரியா நாடு அபராதம் விதித்துள்ளது. 

  • மட்காஸ்கரில் புயல் காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த மழை காரணமாக அங்கு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

  • உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் அந்நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளார்.


விளையாட்டு:



  • இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. 

  • பெய்ஜிங் குளிர்க்கால ஒலிம்பிக் போட்டிகளில் நெதர்லாந்து நாட்டு வீராங்கனை 6ஆவது முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண