தமிழ்நாடு:



  • நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

  • நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.

  • நாளை நீட் விலக்கு மசோதா தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

  • தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திருப்பி பெற கோரி தமிழ்நாடு எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு. 

  • இன்றுடன் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிகிறது. 

  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை 37,518 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்தியா:



  • நீட் விலக்கு மசோதாவை திருப்பி ஆளுநர் திருப்பி அனுப்பியதை தொடர்ந்து மாநிலங்களவையில் திமுக ஒத்துவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளது.

  • இந்தியாவில் கடந்து ஆண்டு 6 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகவும், 44 பத்திரிகையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் அறிக்கை ஒன்றில் தகவல். 

  • புதுச்சேரியில் இன்று முதல் பள்ளி. கல்லூரிகள் திறப்பு.

  • முல்லை பெரியாறு அணையை மறு ஆய்வு செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை.

  • டிஜிட்டல் சொத்துகளுக்கு வரி விதிக்கப்படுவதால் அதிகளவில் நேரடி வரிகள் வசூலாகும் என்று தகவல்.

  • நடப்பு நிதியாண்டில் இலக்கை தாண்டி நேரடி வரிகள் வசூலாகும் என்று மத்திய அரசு நம்பிக்கை. 


உலகம்:



  • நைஜீரியாவில் எண்ணெய் கப்பல் வெடித்து விப்பத்து

  • ஜெர்மனி அருகே டென்மார்க் நாட்டின் சரக்கு கப்பல் தரை தட்டியுள்ளது. 

  • ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராகிம் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்.


விளையாட்டு:



  • குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று சீனாவில் தொடங்குகின்றன. தொடக்க விழாவை இந்தியா புறக்கணிக்கிறது. 

  • இரு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஞ்சி கோப்பை தொடர் இந்த மாதம் முதல் நடைபெற உள்ளது. 

  • ஐசிசி யு-19 உலகக் கோப்பை இறுதி போட்டியில் நாளை இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதல்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண