தமிழ்நாடு:
- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 267 கோடி ரூபாய் நிதியை மத்திய நிதி அமைச்சக்கம் விடுவித்துள்ளது.
- உக்ரைனில் இருக்கும் தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க தமிழ அரசு சார்பில் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டவர்கள் 30 நாட்களில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுப்படி செய்து நீதிமன்றம் உத்தரவு.
- தென்மேற்கு அந்தமானில் வருகிற 28ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
இந்தியா:
- கிரிப்டோ கரன்சி மீதான நிலைப்பாட்டை மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
- உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.
- உக்ரைனிலுள்ள இந்தியர்களை மீட்க இன்று இரண்டு இந்திய விமானங்கள் செல்ல உள்ளது.
- இந்திய வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சரிடன் ஆலோசனை.
- உத்தரப்பிரதேசத்தில் நாளை 5ஆம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.
- ராஜஸ்தானில் ஆழ்துலை கிணற்றில் விழுந்த சிறுவன் 24 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு.
உலகம்:
- உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்கள் ஆலோசனை நடத்தினர்.
- ரஷ்ய அதிபர் புதினின் சொத்துகளை முடக்க ஐரோப்பிய யூனியன் முடிவு எடுத்துள்ளது.
- உக்ரைன் விவகாரம் தொடர்பாக சீன அதிபர் மற்றும் ரஷ்ய அதிபர்கள் ஆலோசனை நடத்தின.
- இங்கிலாந்து விமானங்களுக்கு ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது.
- உக்ரைன் போரில் 1000 ரஷ்ய வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல்.
விளையாட்டு:
- இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெற உள்ளது.
- புரோ கபடி லீக் தொடரில் டபாங் டெல்லி அணி பாட்னா ப்ரைட்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்