தமிழ்நாடு:
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
- திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
- வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூட மாநில தேர்தல் ஆணையம் ஆணை.
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.
- தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணை தொடக்கம்.
இந்தியா:
- மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் மீண்டும் 5 ஆண்டுகள் லாலு பிரசாத் யாதவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
- எல்லைப்புற உட்கட்டமைப்புக்கு 13ஆயிரம் கோடி ரூபாய் நிதியை
- உத்தரப்பிரதேசத்தில் நாளை நான்காம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
- உச்சநீதிமன்றத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நேரடியாக தேர்வு வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
- மார்ச் 15ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடக்கம்.
- 12 வயது முதல் 15 வரை சிறுவர்களுக்கான கோபவேக்ஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உலகம்:
- ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
- 12 ஆண்டுகள் தேடலுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் நம்பர் ஒன் குற்றவாளி கிராஹமை காவல்துறையினர் கைது செய்தனர்.
- உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐநா பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
- உக்ரைன் - ரஷ்யா இடையே பதற்றம் நிலவும் சூழல் உருவாகியுள்ளதால் உக்ரைனிற்கு தொடர்ந்து அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.
விளையாட்டு:
- இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 நாளை மறுநாள் லக்னோவில் தொடங்குகிறது.
- உலக செஸ் சாம்பியன் மெக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தல்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்