தமிழ்நாடு:



  • தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 268 மையங்களில் நாளை காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது

  • வாக்கு எண்ணிக்கையில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முதலில் முடிவுகள் அறிவிக்கப்படும். அதனை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதியப்பட்ட வாக்குகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

  •  வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது இடையூறு செய்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

  • சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள் - திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்

  • ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்


இந்தியா:



  • கர்நாடகாவில் பஜ்ரங் தல் நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு. சிவமோக பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • கடந்த 9 மாதங்களில் இரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் இந்திய இரயில்வே துறை வசூலித்த அபராத தொகை ரூ. 1017 கோடி என அறிவிப்பு

  • உத்தர பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின்போது தனது பாதம் தொட்டு வணங்கிய பிரமுகருக்கு, பாதம் தொட்டு வணங்க வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுரை கூறினார். 

  • ஆந்திர பிரதேச மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பதவி வகித்து வந்த மேகபதி கெளதம் ரெட்டி மாரடைப்பால் திடீர் மரணம்

  • 5வது மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உலகம்:



  • உக்ரைன் - ரஷ்யா விவகாரம் தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு


விளையாட்டு:




  • ஏர்திங்ஸ் என்ற ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயதான பிரக்ஞானந்தா, 8ஆவது சுற்றில் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மெக்னஸ் கார்ல்சனை வென்றுள்ளார்






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண