தனது சுவாராசியமான பல ட்வீட்களுக்காக பெயர் போனவர் மஹிந்த்ரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்த்ரா. அந்த வரிசையில், இந்திய அளவில் பிரபலமான சென்னையைச் சேர்ந்த ஷே ஆட்டோ ஓட்டுனர் அண்ணாதுரையின் வீடியோ ஆனந்த் மகேந்திராவின் கண்களுக்கு தென்பட்டுள்ளது. அப்போது, ஆட்டோ அண்ணாதுரையின் ஐடியாக்களால் ஒரு எம்பிஏ வகுப்பே நடத்திவிடலாம் என நச்சென்று ட்வீட் செய்திருக்கிறார் அவர்.


இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் ஆனந்த் மஹிந்திரா. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு கருத்துக்களை பதிவிடுவார். அது நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுகளை பெறும். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், ஆட்டோ அண்ணாதுரையை புகழ்ந்திருக்கிறார்.


சென்னையைச் சேர்ந்த ஆட்டோ அண்ணாதுரை, தன்னுடைய ஆட்டோவில் இலவச இணைய வசதி, நாளிதழ்கள், பத்திரிக்கைகள், டிவி, ஐபேட் என டெக்னாலஜி சம்பந்தாகவும் சில அப்டேட்களை பொருத்தி இருக்கிறார். சென்னையில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஒட்டி வரும் அவர், இந்திய அளவில் பிரபலம்.






அண்ணாதுரையின் ஆட்டோவில் பயணித்தவர்கள், அவரைப் பற்றிய தகவல்களை புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்வது வழக்கம். அதுமட்டுமின்றி, முன்னணி ஊடகங்களுக்கும் நேர்காணல் கொடுத்து பிரபலமாகிவிட்டார் அண்ணாதுரை. முன்னணி டிஜிட்டல் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டிதான் இப்போது ஆனந்த மகேந்திராவை அடைந்துள்ளது. அதைப் பார்த்த அவர், “எம்பிஏ மாணவ மாணவிகள் ஆட்டோ அண்ணாதுரையுடன் ஒரு நாள் நேரம் செலவிட்டால் போதும், அதுவே அவர்களுக்கு வாடிக்கையாளர்களின் அனுபவ சேவையை எப்படி பூர்த்தி செய்வது என்பதற்கான பாடமாக அமைந்துவிடும். இவர் வெறும் ஆட்டோ ஓட்டுனர் அல்ல. இவர் ஒரு பேராசிரியர்” என புகழ்ந்திருக்கிறார். 


ஆனந்த் மகேந்திராவின் ட்வீட் இப்போது வைரலாகி வருகிறது. அதற்கு பதிலளித்திருக்கும் ஆட்டோ அண்ணாதுரை, “உங்களிடம் இருந்து இந்த செய்தியை பார்ப்பதில் மகிழ்ச்சி சார்” என ரிப்ளை செய்திருக்கிறார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண