தமிழ்நாடு:



  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.

  • சென்னையில் 2 வார்டுகள் உள்பட 5 வார்டுகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

  • சென்னையில் திமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

  • தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 998 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியிருந்தது. 

  • கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 23ஆம் தேதி தொடங்குகிறது.


இந்தியா:



  • உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று பிரதமர் மோடி பரப்புரையில் பேச்சு.

  • பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. 

  • விசாகப்பட்டினத்தில் கடற்படை கப்பல்களின் அணிவகுப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பார்வையிடுகிறார்.

  • உத்தரப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரங்களுக்கு தேர்தல் ஆணையம் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. 

  • கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று ஹிஜாப் தொடர்பான விவகாரம் மீண்டும் விசாரிக்கப்படுகிறது. 


உலகம்:



  • உக்ரைன் நாட்டில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்று தூதரகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

  • ஆஃப்கானிஸ்தானிற்கு மீண்டும் இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளது. 

  • பிரான்ஸ் நாட்டில் மலர் திருவிழா வண்ணம் மையமாக நடைபெற்றது. 

  • உக்ரைன் நாட்டிலிருந்து ஜெர்மனி நாட்டினர் வெளியேற அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 


விளையாட்டு:



  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. 

  • ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. 

  • சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற குளிர்க்கால ஒலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் நிறைவு பெற்றன.

  • குளிர்க்கால ஒலிம்பிக் தொடரில் 16 பதக்கங்களுடன் நார்வே முதலிடம் பிடித்துள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண