கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள பிரம்மகிரி மலைத்தொடர். பாறைகள் அதிகளவில் காணப்படும் இந்த மலைத்தொடரில் ஏராளமான இளைஞர்கள் ட்ரெக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், அந்த மலைக்கு ட்ரெக்கிங் சென்ற 19 வயது இளைஞர் ஒருவர் இன்று ட்ரெக்கிங் சென்றுள்ளார்.




அப்போது, அவர் எதிர்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்துள்ளார். மலையில் இருந்து உருண்டு கீழே விழுந்த அவர் மலையில் இருந்து 200 அடி பள்ளத்தில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து, உடனடியாக அவருடன் சென்றவர்கள் கர்நாடக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.






செங்குத்தான மலைப்பகுதியான பிரம்மகிரி மலைப்பகுதியில் அந்த இளைஞர் சிக்கியிருந்த பகுதியில் மீட்பு படை வீரர்கள் கீழே இறங்கி மீட்கும் அளவில் இல்லை. இதனால், உடனடியாக இந்திய விமானப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், இந்திய விமானப்படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் மலையில் இருந்து தவறி கீழே விழுந்த இளைஞரை பத்திரமாக மீட்டனர்.




தற்போது, அந்த இளைஞரை ஹெலிகாப்டரில் மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரம்மகிரி மலையில் 200 அடி பள்ளத்தில் சிக்கிய இளைஞரை மீட்ட இந்திய விமானப்படைக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், இதுபோன்று மலைகளில் ட்ரெக்கிங் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் மலையில் இருந்து தடுமாறி கீழே விழுந்த நெருக்கடியான பகுதியில் சிக்கிக்கொண்ட இளைஞரை 48 மணி நேரம் போராடி ராணுவம் மீட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண