தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டில் இன்று பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. 

  • பருத்தி மற்றும் நூல் விலைகளை கட்டுப்படுத்த கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்.

  • தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்களுக்கான கலந்தாய்வு வரும் 27ஆம் தேதி நடைபெறும். 

  • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி ஒரு சில நாட்களில் வெளியாகும்.

  • 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு.

  • தனியார் நிறுவனங்களுக்கு கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாட்டு விதிகளை அரசு வெளியிட்டுள்ளது. 

  • டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி அதிமுக போராட்டம் நடத்த உள்ளது. 


இந்தியா:



  • 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய பிரதமர் மோடி தலைமையில் பாஜக தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது.

  • புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.

  • சபரிமலையில் மகரவிளக்கு பூஜை காலம் நிறைவு பெறுகிறது. 

  • டெல்லி செங்கோட்டை வரும் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்படுகிறது. 

  • சர்வதேச விமான பயணிகளுக்கான விமான தடை அடுத்த மாதம் வரை நீட்டிப்பு.


உலகம்:



  • கிழக்கு லடாக் பகுதியில் மேம்பாளம் பணியை சீன ராணுவம் நிறைவு செய்ய உள்ளது. 

  • இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இயக்கப்படும் 4 விமானங்களை ஏர் இந்தியா நிறுத்தியுள்ளது.

  • அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்களை எமிரேட்ஸ் விமானமும் நிறுத்தியுள்ளது. 

  • கனடாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலையில் போக்குவரத்து ரத்து. 

  • இங்கிலாந்தில் ஒரு சில கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

  • உக்ரைன் மீது போர் தொடுத்தால் தீவிர விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று ரஷ்யாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை. 


விளையாட்டு:



  • தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. 

  • தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம் விராட் கோலி மேலும் ஒரு சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.

  • இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா இந்தாண்டு இறுதியில் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண