தமிழ்நாடு:



  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. 

  • பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

  • முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-ன் 105ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

  • நியாய விலை கடைகளில் இன்று ஒருநாள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. 

  • ஆலங்குடியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. 

  • தமிழ்நாடு முழுவதும் வரும் 22ஆம் தேதி மெகா தடுப்பூசி மையம் நடைபெறும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு

  • 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வரும் 31ஆம் தேதி வகுப்புகள் எடுக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது


இந்தியா:



  • 12 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி மார்ச் மாதத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்.

  • இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி ஒராண்டு நிறைவடைந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 157 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

  • கேரளாவிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று முதல் ஆன்லைன் மூலம் விசாரணை நடைபெற உள்ளது. 

  • சத்தீஷ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் மீது உத்தரப்பிரதேச அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. 

  • பீகாரில் கள்ள சாராயம் குடித்த சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


உலகம்:



  • கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் மேலும் 100 கோடி தடுப்பூசி வழங்க உலக சுகாதார மையம் அறிவிப்பு.

  • சீனாவில் அதிகரித்து வரும் ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக வழிப்பாட்டு தளங்கள் மூடப்பட்டுள்ளன.

  • அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


விளையாட்டு:



  • இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்று அசத்தியுள்ளது. 

  • விசா ரத்தானதால் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து ஜோகோவிச் வெளியேற்றம். 

  • இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்ஷ்யா சென் சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்.

  • இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்-சிராக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண